பதிவு செய்த நாள்
03
பிப்
2017
12:02
திருவண்ணாமலை,: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள, 86 பரிவார மூர்த்திகளுக்கு, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 6ல் நடக்கிறது. இதையொட்டி, கோவில் ஐந்தாம் பிரகாரத்தில், 108 யாக குண்டங்கள் அமைத்து, 1,008 கலசங்கள் வைத்து, சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை, 8:05 மணிக்கு, யாக சாலையில் விசேஷ சந்தி பூஜை நடந்தது.தொடர்ந்து, நான்காம் கால யாக பூஜை, கலச புறப்பாடு நடந்தது. இதில், ராஜகோபுர விநாயகர், கம்பத்து இளையனார் முருகர் சன்னிதி உட்பட, 86 பரிவார மூர்த்திகளுக்கு, 9:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 6ல், காலை, 9:05 மணி முதல், 10:30 மணிக்குள், ராஜகோபுரம் உட்பட, ஒன்பது கோபுரங்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சன்னிதி உட்பட, 59 சன்னிதிகளில், மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.