திருப்பரங்குன்றம் கோயிலில் நாளை தை கார்த்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2017 01:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை தை கார்த்திகை நடக்கிறது. கோயிலில் தெப்பத்திருவிழா ஏழாம் நாள் விழாவாக இன்று காலை சுவாமி ரத்தின சிம்மாசனத்திலும், இரவு பச்சைக் குதிரை வாகனத்திலும் எழுந்துளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை மிதவை தெப்பத்தை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து, 16 கால் மண்டபம் முன்புள்ள தேரில் எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். தை கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கிறது.