செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், இன்று ரத சப்தமி திருவிழா நடக்கிறது. செஞ்சி தாலுகா, சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பதி திருமலையில் நடப்பதை போல், இன்று ஏழு வாகனங்களில் ரங்கநாதர் மாட வீதிகள் வழியாக வீதி உலா நடக்க உள்ளது. இதன்படி காலை முதல் சூரியபிரபை வாகனம், சேஷவாகனம், கருடசேவை, குதிரை வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனத்தில் ரங்கநாதர் அருள்பாலிக்க உள்ளார்.