பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
இடைப்பாடி: கவுண்டம்பட்டியில், கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடங்கள் எடுத்து ஊர்வலம் சென்றனர். இடைப்பாடி, கவுண்டம்பட்டி, புதிய தெருவில் உள்ள சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதற்காக, கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, நேற்று, தீர்த்தக்குடங்களை, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்து, ஊர்வலம் வந்தனர். அவர்கள், இடைப்பாடி, செல்லியாண்டி அம்மன் கோவில் தெரு, தோப்பூர் வழியாக, மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.