பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
வேலுார், : "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேகம், பிப்.,6 நடக்கிறது. இதில், 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மூன்று சிறப்பு ரயில்களை இயக்குவதாக, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்திருக்கிறது. அதன்படி, நாளை மற்றும் பிப்.,6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் கால அட்டவணை விவரம் வருமாறு: பிப்.,5 இரவு, 10:00 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்படும் ரயில், காட்பாடி வழியாக, 6ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். அதேபோல், 6ம் தேதி மாலை, 4:00 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், காட்பாடி வழியாக, இரவு, 10:00 மணிக்கு சென்னை சென்றடையும்.
பிப்.,5 விழுப்புரத்தில் இருந்து காலை, 9:00 மணிக்கு புறப்படும் ரயில், திருக்கோவிலுார் வழியாக மதியம், 12:30 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். அதேபோல், 6ம் தேதி பிற்பகல், 1:00 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, திருக்கோவிலுார் வழியாக பிற்பகல், 3:30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். பிப்.,5 பிற்பகல், 1:00 மணிக்கு, தென் காசியில் இருந்து புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக அன்று நள்ளிரவு, 1:00 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். 6ம் தேதி மதியம், 12:00 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்த புறப்பட்டு, விழுப்புரம் வழியாக இரவு, 11:00 மணிக்கு தென்காசி சென்றடையும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.