பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நகர வீதிகளில், கோவில் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 22 ஆண்டுகளுக்கு பிறகு, 9ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிப்.,3 கலச புறப்பாடு நடைபெற்றது.கோவில் கோபுரங்களில் வைத்து பூஜிக்க, கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய அனைத்து கோபுரங்களும் இரண்டு வாகனங்களில் வைக்கப்பட்டன. இந்த வாகனங்களுக்கு பின், காமாட்சியம்மன் படத்துடன் வெள்ளித்தேர் புறப்பட்டது. பிப்.,3 மாலை,
6:00 மணிக்கு, காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில், கலசங்கள் ஊர்வலமாக சென்றன. பக்தர்கள் அனைவரும் கலசங்களை வழிபட்ட பின், கலசங்கள் கோவிலுக்கு சென்றன.