பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவிலில், 1,008 பால் குட விழா பிப்.,3 நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில், வேதமலை என, போற்றப்படும் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பல்லவர் கால புகழ்பெற்ற கோவில் இது. உலக நன்மைக்காகவும், பட்சிகள் மீண்டும் வருகைத்தர வேண்டியும் வேதமலை வல இருமுடிப் பெருவிழா குழு சார்பில், பிப்., தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவில், ஆமை மண்டபத்திலிருந்து, 1,008 பால் குடத்துடன் புறப்பட்டு, மலைக்கோவில் வேககிரீஸ்வரருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், செயல் அலுவலர் தியாகராஜன், வேதமலை குழு நிர்வாகிகள் துரை, அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல, டிசம்பர் மாதம், கழகு வர வேண்டி, 108 கோ பூஜையும், 1,008 சுமங்கலிகளின் பிரார்த்தனையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.