பதிவு செய்த நாள்
04
பிப்
2017
01:02
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் திருமுருகன் கோவிலில், பிப்.,3 மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரத்தி்ல் அமைந்துள்ளது, திருமுருகன் கோவில். இங்கு, 16 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் பிப்.,3 நடந்தது. முன்னதாக, கடந்த, 31ல், கிராம தேவதை வழிபாட்டுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்.,3 காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. முதல் கோவிலின் ராஜகோபுரத்திற்கும், அதற்கடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகன் சன்னிதிக்கும், தர்மசாஸ்தா அய்யப்பன், காசி விஸ்வநாதர் மற்றும் விநாயகர் ஆகிய கோவில்களின் கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாணமும், சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், தர்மசாஸ்தா அய்யப்பன் புலி வாகனத்திலும் எழுந்தருளி, வீதியுலா வந்தனர். கும்பாபிஷேகத்தில் நரசிங்கபுரம், இருளஞ்சேரி, பேரம்பாக்கம், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், திரளாக பங்கேற்றனர்.