அவலுார்பேட்டை: தாழங்குணத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, தாழங்குணம் கிராமத்தில் தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பிப்.,3 காலை நடந்தது. முன்னதாக கடந்த 1ம் தேதி முதற்கால பூஜையும், 2 ம் தேதி ேஹாமம், தீபாராதனையும் நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.