மாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ஜயா ஏகாதசி’ ஆகும். மார்ச் 8 (மாசி24) அன்று இது அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் வைகுண்ட ஏகாதசியன்று அனுஷ்டிப்பது போல காலை முதல் மாலை வரை துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி, இரவில் கண்விழிக்க வேண்டும். மறுநாள் துவாதசியன்று காலை சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். ஏகாதசியன்று ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, திட்டங்களில் வெற்றி பெற இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடிகார கணவர்கள், மனைவியை கறிவேப்பிலை போல் நினைப்பவர்களைத் திருத்தி அவர்களிடமுள்ள தீய குணங்களை விரட்டவும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். பேய் பயம் இருப்பதாக சிலர் பயந்து கொண்டே இருப்பர். அவர்களுக்கும் இந்த விரதம் நிவாரணமளிக்கும்.