பதிவு செய்த நாள்
07
பிப்
2017
12:02
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் புதுப்பிப்பு பணி, சுறுசுறுப்பாக நடக்கிறது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலை சீரமைக்க, 2.80 கோடி ரூபாய் ஒதுக்கி, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதற்கான பணி தொடர்ந்த நிலையில், பெரிய மாரியம்மன் அறக்கட்டளையை சேர்ந்த ரஜினிசெந்தில் என்பவர், கருவறையை அகற்றக்கூடாது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், பல மாதங்களாக பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன், கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. நேற்று, கருவறையை சுற்றி இருந்த வெளி பிரகாரம் இடிக்கப்பட்டு, புதிய பிரகாரம் அமைக்க, தூண்கள் அமைக்கும் பணி, சுறுசுறுப்பாக நடந்தது. அதேநேரம், இரும்பு தகடுகளால் கருவறை அடைக்கப்பட்டிருந்தது.