பதிவு செய்த நாள்
07
பிப்
2017
12:02
குளித்தலை; அய்யர்மலை மலைக்கோவிலுக்கு, கம்பிவட ஊர்தி அமைக்கும் திட்டத்துக்கு, 6.70 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கான பூர்வாங்க பணிகள், வரும், 9ல் துவங்க உள்ளது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்சாயத்து, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு, கடந்த, தி.மு.க., ஆட்சியில், ரோப் கார் (கம்பிவடம் ஊர்தி ) அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதில், மக்கள் பங்களிப்பாக, 2.00 கோடி ரூபாயும், மற்ற நிதியை அரசே ஏற்றுக்கொண்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ரோப் கார் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். தொடர்ந்து, கோவில் குடிப்பாட்டுகாரர்களின் முயற்சியால், ஆறு ஆண்டுகளுக்கு பின், ரோப் கார் திட்டத்துக்காக, 6.70 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, பணிகளை துவக்க, அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து, அய்யர்மலை கோவில் செயல் அலுவலர் ஜெயகுமார் கூறுகையில், ரோப் கார் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், வரும், 9ல் பணிகள் துவங்க உள்ளது; பழநி கோவிலுக்கு ரோப் கார் அமைத்து கொடுத்த, கொல்கட்டா மாநில கம்பெனி செய்யவுள்ளது, என்றார்.