தாகம் தணிக்கும் தண்ணீரை தமிழில் நீர் என்கிறோம். தெலுங்கில் நீலு என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும். இந்தியில் பாணி என்றும், வடமொழியில் தீர்த்தம் என்றும், ஆங்கிலத்தில் வாட்டர் என்றும் அழைக்கிறார்கள். தண்ணீர் ஒன்று தான் என்றாலும் அதற்குத் தான் இத்தனை பெயர்கள். உண்மையில் தண்ணீருக்குப் பெயர் எதுவும் தேவை இல்லை. எந்த பெயரால் அழைத்தாலும் அதற்கு கவலையும் இல்லை. நம் தேவைக்காகத் தான் இத்தனை பெயர்களால் அழைக்கிறோம். கடவுளுக்கு பேரும் இல்லை. ஊரும் இல்லை. ஆயிரமாயிரம் பெயர்களால் அவரை அழைப்பது எல்லாமே நம் தேவைக்காகத் தான்.