Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம் திருவிழா - துளிகள்! மலையில் முருகன் கோயில் அமைந்தது ஏன்? மலையில் முருகன் கோயில் அமைந்தது ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் செல்கிறீர்களா?
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் செல்கிறீர்களா?

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
04:02

திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் நீராடிய பிறகு நாழிக்கிணற்றில் நீராடுகிறார்கள். கடலில் தங்கள் மீது படிந்த உப்புநீரைக் கழுவ வேண்டும்  என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இது சரியான முறையல்ல. ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட ÷ வண்டும். நாழிக்கிணறு சூரபத்மனின் உடலைக் கூறாக்கிய வேலுக்கு தோஷம் நீங்கும்பொருட்டு அதனை பூமியில் ஊன்றி வரவழைக்கப்பட்டது.  முருகப் பெருமான் வேலை எய்து பாதாள கங்கையை வரவழைத்தார். அதுவே நாழிக்கிணறாக மாறியது. வேறு எந்த முருகன் தலத்திலும் இது ÷ பான்ற அபூர்வ தீர்த்தம் கிடையாது.

வள்ளி கல்யாணம் நடந்த பூசம்: வள்ளி கல்யாணம் கோயில் திருவிழாவில் நாடகமாக நடக்கும். இதற்கு சிறப்பான தத்துவம் உண்டு. வள்ளி என்பது  ஜீவாத்மா என்னும் உயிர். முருகனை அடைய விடாமல், அவளது உறவினர்கள் தடுத்தனர். ஆனால், தோழிகள் முருகனிடம் வள்ளியைச் சேர்த்தனர்.  அதுபோல, நம்முடைய தீவினைகளாகிய உறவினர்கள், நம்மைக் கடவுளை அடைய விடாமல் தடுக்கின்றன. தோழிகளாகிய நல்வினைகள் நம்மை  கடவுளிடம் சேர்க்கின்றன. நற்செயல்களின் உதவியால் மட்டுமே, நாம் முருகனை அடைய முடியும் என்பதே வள்ளி கல்யாணம் காட்டும் உண்மை.  முருகன் வள்ளியைத் திருமணம் செய்ததும் பூச நட்சத்திரத்தில் தான். திருத்தணியில் மாசி பூசத்தன்று வள்ளி திருமணம் நடக்கும்.

வேல் பெற்ற நன்னாள்: சூரபத்மனை வதம் செய்வதற்காக, முருகப்பெருமான் அன்னை பார்வதியின் அருளை நாடினார். தன் ஆற்றலை எல்லாம்  ஒன்று திரட்டிய பார்வதி, அதை வேலாயுதமாக மாற்றினாள். வேலை முருகனுக்கு அளித்து, வெற்றி உனதே என்று வாழ்த்தினாள். இதனால், வேல்  முருகனின் அடையாளமானது. அன்னையிடம் வேல் பெற்ற நன்னாளே தைப்பூசம் என்பர்.  பக்தர்கள் பால், பன்னீர் போன்ற திரவியங்களைக்  காவடியில் தாங்கி வந்து முருகனுக்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டுகின்றனர்.

ஐந்தாவது படை வீடு: ஆறுபடைவீடுகளை வரிசைப்படுத்தும்போது ஐந்தாம்படை வீடாக திருத்தணியைக் குறிப்பிடுவர். இதைக் குன்றுதோறாடல்  என்று சொல்வதும் உண்டு. இதற்கு குன்று தோறும் குடியிருப்பவன் என்று பொருள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்ற சொல்  வழக்கு இதை உறுதிப்படுத்துகிறது. ஆறுபடை வீடு மட்டுமில்லாமல் மலைக்கோயிலான எல்லா முருகன் கோயில்களுமே குன்றுதோறாடலில் அட ங்கும்.

முருகனுக்கு ஆடு வாகனம்: முருகனின் வாகனம் மயில். ஆனால், முருகனுக்குரிய மந்திர நூலான கந்தரனுபூதியில் முருகனின் வாகனம் ஆடும் பரி  என அருணகிரிநாதர் பாடியுள்ளார். ஆடும் என்பது நடனத்தைக் குறிக்கும். பரி என்றால் குதிரை. குதிரையோ நடனமாடுவதில்லை. அதனால், மயி லையே ஆடும் பரி என அருணகிரியார் குறிப்பிடுகிறார். வேறொரு பாடலில் மயிலை துரகம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். அதற்கும் குதிரை  என்றே பொருள். கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில், மருங்கூர் கோயில்களில் உள்ள முருகன் திருவிழாக் காலங்களில் குதிரையில் பவனி  வருவது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முத்துக்குமாரர் கோயில், திருச்சி வயலூர் முருகன் கோயில்களில் முருகப்பெரு மான் ஆடு, வாகனத்தில் பவனி வருகிறார். சில கோயில்களில் யானை வாகனம் உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar