பதிவு செய்த நாள்
09
பிப்
2017
02:02
குளித்தலை : குளித்தலை, கடம்பர்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை, 5:00 மணியளவில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது. குளித்தலை, கடம்பர்கோவில் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வர் கோவில், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்யார்ஜீனேஸ்வர் கோவில், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வர் கோவில், கருப்பத்துார் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீஸ்வர் கோவில், திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்யாஜீனேஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர் கோவில், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவில், வெள்ளுர் சிவகாமி உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் சுவாமிகளின் சந்திப்பு இன்று நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 10:30 மணியளவில் சுவாமிகள் சந்திப்பும் மற்றும் தீபாராதனை, சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. குளித்தலை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஏற்பாடுகளை கடம்பர்கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.