கோவில் கும்பாபிேஷகம்: பெண்கள் புனித நீருடன் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2017 02:02
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடப்பதை முன்னிட்டு, நேற்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து பெண்கள் புனித நீரை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். போச்சம்பள்ளி அடுத்த குள்ளனுார் கிராமத்தில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (பிப்.9) நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாரியம்மன் சிலையை மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது, பெண்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். இன்று காலை, 9.00 மணிக்கு, மாரியம் மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டை குள்ளனுார் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.