பதிவு செய்த நாள்
09
பிப்
2017
02:02
கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை அடுத்துள்ள, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா முடிந்ததை முன்னிட்டு, அம்மனுக்கு மண்டல பூஜை விழா துவங்கியது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி அருகில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 6 அன்று மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷக விழா நடந்தது. நேற்று மதியம், 2:00 மணி அளவில் பக்தர்கள் சார்பில், மண்டல பூஜை துவங்கப்பட்டது. இதில், அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம் பொருட்கள் கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மன் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.