குளித்தலை : கோவை மாவட்டத்தில் உள்ள, வெள்ளிங்கிரி மலைச்சாரல் ஈஷா யோகா மையத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆதியோகி சிவன் திருஉருவ சிலை பிரதிஷ்டை வலம் வந்து கொண்டிருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மாதிரி ஆதியோகி சிவன் திரு உருவ சிலை வைக்கப்பட்டு, நேற்று மாலை குளித்தலை பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தது. பொதுமக்கள் சிவனை பார்வையிட்டு வழிபட்டனர்.