பீமரதன் என்பது ஒரு மிருத்யுவுடைய பெயர். இது 70 வயதில் செய்வது. அதாவது, 69 முடிந்து 70 வது வயது தொடங்கும்போது செய்துகொள்ள வேண்டியது. இதனை ஒரு கண்டம் என்றும் சொல்லலாம். இந்த கண்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. 48, 54, 60 முடிந்து 61 வயது, 70 வயது 81 வயது மூன்று மாதம் கழிந்தது, 100 ஆவது வயதுகளில் சில பரம்பரை மரபு பிரச்னைகளோ, சில கண்டங்களோ, சில மாறுதல்களோ ஏற்படும் என்பதை ரிஷிகள் முன்கூட்டியே அனுமானித்து, அந்த சமயங்களில் சில பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும் என்று வகுத்து வைத்திருக்கிறார்கள். சாஸ்திரங்களிலும் இதனைச் சொல்லியிருக்கிறார்கள். அதில் 70 வது வயதில் செய்து கொள்வதற்குப் பெயர் பீமரத சாந்தி என்பது. பீமரதன் என்ற ம்ருத்யுவினை சாந்திப்படுத்துவதற்கு, சமனப்படுத்துவதற்கு உண்டான ஜப பூஜைகளுக்கு பீமரத சாந்தி என்று பெயர்.