காளையார்கோவில், காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. சொர்ணகாளீஸ்வரர் கோவில் தைப்பூசத்திருவிழா ஜன.31 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம்,தீபாராதனை நடைபெற்று வந்தது. நேற்று காலை 4:00 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது, 5:00மணிக்கு பெரிய தேரில் சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மனும், சின்ன தேரில் சொர்ணவள்ளி அம்மன் எழுந்தருளினார். 9:30 மணிக்கு மக்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. சின்ன தேரை முதன் முறையாக பெண்களே ஆரவாரத்துடன் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.