தேனி கோயில்களில் தைப்பூச சிறப்பு பூஜை: ஏராளமானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2017 01:02
தேனி, தைப்பூசத்தையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு தேனி வேல்முருகன் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் தைப்பூச சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கந்தர் சஷ்டிகவசம்பாடி தரிசனம் செய்தனர்.
மூணாறு: மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா அனைத்து பழநி பாதயாத்திரை குழு சார்பில் கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு கோயிலில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. முருகன், வள்ளி- தெய்வானை பவனி வந்தனர். தேர் பார்வதியம்மன் கோயிலை சென்றதும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தேர் கோயிலை சேர்ந்தது.