பதிவு செய்த நாள்
10
பிப்
2017
01:02
திருக்கோவிலுார்: திருவண்ணாமலையில், ராம்சுரத்குமார் 16ம் ஆண்டு ஆராதனை விழா, வரும், 22 மற்றும் 23ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. 22, காலை, 6:30 மணிக்கு, ஹோமங்கள் மற்றும் அதிஷ்டானத்தில் அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பகல், 10:30 மணிக்கு, சுவாமியுடன் ஏற்பட்ட அனுபவங்களை பக்தர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். மாலை 4:30 மணிக்கு, சற்குருநாத ஓதுவாரின் தேவார இன்னிசை கச்சேரியும், 6:30 மணிக்கு, ஸ்ரீராம் பரசுராம் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.