பதிவு செய்த நாள்
10
பிப்
2017
02:02
சேலம் : சேலம் மாவட்ட முருகன் கோவில்களில், தைப்பூசத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அம்மாப்பேட்டை, செங்குந்தர் சுப்பிரமணியர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பால், இளநீர், நெய், தயிர் உள்பட, 64 வகை திரவியங்களால், சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு, தங்கக்கவசம் சாத்தப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், இரவு, 7:30 மணிக்கு, பக்தர்கள் எடுத்து வந்த பால், பன்னீர், இளநீர் காவடிகள் மூலம், சிறப்பு அபிேஷகம் நடந்தது. உடையாப்பட்டி முருகன், ராஜ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், சேலம் சுகவனேஸ்வரர், ராஜகணபதி, ஓமலுார் காசிவிஸ்வநாதர், தாரமங்கலம் கைலாசநாதர், மகுடஞ்சாவடி சுப்ரமணியர், சங்ககிரி, அக்கமாபேட்டை சுப்பிரமணியர், ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர், ஊத்துமலை, பேர்லாண்ட்ஸ், அடிவாரம், வடசென்னிமலை, பேளூர் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.