பழமையான பிரம்ம தீர்த்தக்குளம் கும்பாபிேஷக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2017 02:02
கரூர் : கரூர், வஞ்சுவலீஸ்வரர் கோவில் அருகேயுள்ள, பிரம்மதீர்த்தக்குளம் புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை அக்னி குண்டம் அமைக்கப்பட்ட தீர்த்த கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டன. கரூர், அமராவதி கரையோரம் வஞ்சுவலீஸ்வரர் கோவில் உள்ளது. விசாலாட்சி உடனமர் ஈஸ்வரன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவில் அருகில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தை சுற்றிலும் முட்புதர்கள், படித்துறைகள் சேதமடைந்தும், தண்ணீர் இன்றியும் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். பக்தர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் சேர்ந்து குளத்தை புனரமைத்தனர். குளத்தின் கும்பாபிேஷகம் நேற்று காலை, 10:40 மணியளவில் நடந்தது. குளத்தின் முன் ஹோம குண்டம் அமைக்கப்பட்டு, கும்பத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, கருடன் வலம் வந்த பின் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈஸ்வரனை வழிபட்டனர்.