Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரிய மனிதர்களுக்கு படிப்பினை! 108 விநாயகர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆண்டவன் உலகத்தின் முதலாளி ..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
04:02

*உலகின் முதலாளியாக கடவுள் ஒருவரே இருக்கிறார்.  நாம் அவருக்கு பணிவிடை செய்யும் ஊழியர்களாக இருக்கவே இந்த மண்ணில்  பிறந்திருக்கிறோம்
*பூமியின் நான்கு திசைகளிலும்  பயணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை எங்கும் காண முடியாது. இருப்பது எல்லாம் உங்களின் உள்ளத்திலேயே இருக்கிறது.
*வீடு கட்டும் போது சாரம் அவசியம். கட்டி முடித்த பின் அது தேவை இல்லாமல் போய்விடும். அதுபோல பக்தியின் தொடக்கத்தில் சிலை வழிபாடு அவசியம். பக்தியில் பக்குவம் அடைந்தபின் அது தேவையில்லை.
*அன்றாடப் பணிகளில் ஈடுபட அதிகாலைப் பொழுது பொருத்தமானது. மனிதன் ஆன்மிக வழியில் மனதைச் செலுத்த இளமைப்பருவம் பொருத்தமானது.
*கடின உழைப்பும், முயற்சியும் உள்ளவனுக்கு எல்லாமே கிடைக்கும். இந்தப் பண்புகள் இல்லாவிட்டால், உலகில் ஒன்றுமே கிடைக்காது.
*எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுவே வாழ்வில் துன்பம் உண்டாகக் காரணம்.
*உங்களுடைய வழிபாட்டு முறைகளில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டிருங்கள். ஆனால் மற்றவர் மீது வெறுப்பு சிறிதும் கொள்வது கூடாது.
*கடவுளை வெளியுலகில் தேட வேண்டாம். அவர் நமக்குள் இருப்பதை உணர்வதே அறிவு. இந்த உண்மையை அறிந்தவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடி ஒற்றுமையை நிலைநாட்டுவர்.
*பிறருடைய குற்றம், குறைகளில் மனதைச் செலுத்துபவன் காலத்தை வீணாக்குகிறான். தன்னுடைய குறைகளைத் திருத்திக் கொள்பவன் வாழ்வைப் பயனுள்ளதாக்குகிறான்.
*உலகின் மூலமாக இருக்கும் ஒன்றைத் தெரிந்து கொண்டால் போதும். பிறகு எல்லாம் தெரிந்து விடும். ஒன்று என்னும் இலக்கத்துடன் சேரும் பூஜ்யமும் மதிப்பு பெறுவது போல கடவுளை அறிந்தால் தான் மனிதனுக்கே மதிப்பு.
*பழுத்த மரம்  கனிகளைச் சுமப்பதால் எப்போதும்  தாழ்ந்து நிற்கும். மனிதனும் மதிப்புடன் வாழ வேண்டுமானால் பணிவுள்ளவனாக இருக்க வேண்டும்.
*பணம் யாருக்கு அடிமையோ, அவனே உண்மையான மனிதன். பணத்தால் உணவு, உடைகளைப் பெற முடியுமே தவிர ஞானத்தை வாங்க முடியாது.
*அதிகம் படித்தவன் விவாதம் செய்வதில் ஈடுபாடு கொள்கிறான். மனதை கடவுளிடம் ஒருமுகப்படுத்தியவன் பேச்சை விட செயலையே மதிக்கிறான்.
*கடவுள் மனிதனை  எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே காண்கிறார்.  அவரவர் எண்ணத்திற்கு ஏற்பவே கடவுளின் அருளும் வெளிப்படுகிறது.
*படிப்பதை விட கேள்வி கேட்பது சிறந்தது. கேட்பதை விட நேரில் காணும் அனுபவம் உயர்ந்தது.
*தீர்த்த யாத்திரை சென்று திரும்பிய பிறகும் மனம் பக்தியில் ஈடுபடாவிட்டால், யாத்திரை சென்றதால் ஒருபயனும் உண்டாகவில்லை என்றே பொருள். (மகான்) ராமகிருஷ்ணர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar