Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறைவன் நினைப்பதே நடக்கும்! ஆண்டவன் உலகத்தின் முதலாளி ..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரிய மனிதர்களுக்கு படிப்பினை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
04:02

சமுதாயத்தில் அந்தஸ்து மிக்க மனிதர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் பொறுமை, கண்ணியம் வேண்டும் என்பதை துரோணர், குசேலர் ஆகியோரின் வாழ்க்கை சரிதம் மூலம் எடுத்துச் சொல்கிறார் காஞ்சிப்பெரியவர். துரோணரும், துருபதனும் குருகுலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இளவரசனான துருபதன், “நான் அரசனானால் உனக்குப் பாதி நாட்டை அளிப்பேன்,” என்று வாக்களித்தான். பிற்காலத்தில் வறுமையில் வாடும் துரோணர், நண்பன் அளித்த வாக்குறுதியைப் பயன்படுத்தி உதவி கேட்டார். ஆனால், துருபதன் அதை மறுத்ததோடு அவமரியாதையும் செய்தான். இதற்காக அவனை பழிவாங்க எண்ணிய துரோணர்,  தன் சீடன் அர்ஜுனன் மூலம் துருபதனை தோற்கடித்து அவனது நாட்டைக் கைப்பற்றினார். போனால் போகிறது என்ற நிலையில்  நாட்டின் ஒரு  பாதியை துருபதனுக்கு  வழங்கினார். இதன் பிறகு துரோணரை அழிக்க துருபதன் யாகம் செய்தான். அந்த யாக குண்டத்தில் திருஷ்டத்யும்னனும், திரவுபதியும் தோன்றினர்.

அவர்களைத் தனது பிள்ளைகள் ஆக்கிக்கொண்டான். துருபதன் தன்னைத் தோற்கடித்த அர்ஜுனனுக்கு,  மகள் திரவுபதியை மணம் முடித்து வைத்தான்.  ஒரு கட்டத்தில் பாண்டவர், கவுரவர் இடையே  போர் மூண்டது. துரோணர் கவுரவர் அணியில் நிற்கும் போது, அவரை எதிர்த்து நின்றவன் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன். இதற்கிடையில், பகவான் கிருஷ்ணர், போரில் அஸ்வத்தாமன் இறந்ததாக ஒரு தகவலை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் மூலம் சொல்லச் செய்கிறார். அதாவது அஸ்வத்தாமன் என்னும் பெயர் கொண்ட  யானை ஒன்று  இறந்து போயிருந்தது. அதை தர்மர் “அச்வத்தாம ஹத: குஞ்ஜர” என்று  தெரிவித்தார். இது காதில் விழுந்ததும்,  துரோணர் ஆயுதங்களை கீழே போட்டு மயங்கி விழுந்தார். ஏனென்றால், அஸ்வத்தாமன் என்பவன் துரோணரின் மகன். குஞ்ஜரம் என்பதற்கு யானை என்பது பொருள்.

குஞ்ஜர என்ற வார்த்தை மட்டும், அவரது காதில் விழுந்து விடாதபடி, அந்நேரத்தில் கிருஷ்ணர் சங்கை எடுத்து ஊதியதால்  துரோணருக்கு உண்மை புரியவில்லை. போரில் துரோணர் அர்ஜுனனிடம் தோற்றுப் போனார். துரோணர் பிறப்பால் பிராமணர். அவர் அர்ஜுனன் உள்ளிட்டவர்களுக்கு போர்முறையைக் கற்றுக் கொடுத்ததோடு, ஆயுதமும் ஏந்தி போரிட்டது  பிராமண தர்மம் ஆகாது. துருபதனை அவர் பழி வாங்க துடித்ததும் தேவையில்லாதது. பாரதத்தில் வரும் இன்னொரு பிராமணரான குசேலர், தர்மத்தை எப்போதும் மீறியதில்லை.  குருகுலத்தில்  கிருஷ்ணருடன் படித்த குசேலர், தன் வறுமை தீர  உதவி கேட்டுச் சென்றார். ஆனால், நண்பனைப் பார்த்ததும் உதவி கேட்க கூச்சப்பட்டார் என்பதை விட, கிருஷ்ண தரிசனமே போதுமென நினைத்து விட்டார். அவர் கொடுத்த ஒரு பிடி அவலுக்கு மாற்றாக அவர் வாழ்ந்த ஊருக்கே செல்வவளம் வந்து விட்டது. கிருஷ்ணரிடம் கவுரவம் பெற்றதோடு வளமான வாழ்வையும் பெற்றார். மனிதர்கள் அமைதி, பொறுமை போன்ற  நற்குணங்களை பின்பற்றினால் கவுரவமாக வாழலாம். இல்லாவிட்டால்  விளைவு விபரீதமாகும்  என்பதை துரோணர், குசேலர் வரலாறு உணர்த்துகிறது.  (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar