சிவராத்திரி இரவின் மூன்றாம் பகுதியே லிங்கோற்பவ காலமாகும். சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு அருவுருமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரம் இதுவே. இந்த வேளையில் சிவதீட்சை பெற்றுக்கொள்ளுதல், சிவலிங்க பூஜையை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியன அதிக சிறப்பைத் தருவதாகும். அன்பரின் உள்ளத்திலுள்ள அறியாமை இருளை நீக்கி அங்கு ஞான ஒளியை ஏற்றி தீட்சை செய்விக்கிறார் குரு. அப்போது சிவபெருமான் அன்பர் மனதில் எழுந்தருளி, அவருக்கு அருள்பாலிக்கிறார். அன்பருள்ளத்தில் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும் லிங்கோற்பவம் என்றே குறிக்கப்படுகிறது.