உணவும் உறக்கமும் உயிர்க்குப் பகையாகும். இங்கு உணவு என்பது வினைகள். அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்க நேரும். உறக்கம் என்பது மாயைக்குட்பட்டு மயங்குதலாகும். ஆதலின் உணவு நீக்கம் என்பது வினைகளை அகற்றிக்கொள்வதும். விழித்திருத்தல் என்பது ஆன்மா தன்னை உணர்ந்துகொள்வதும் ஆகும். சிவராத்திரியில் உறக்கம் ஒழிப்பதென்பது, உண்மையில் ஆன்மா வினைகளை வென்று தன்னை உணர்ந்து கொள்வதேயாகும்.