பதிவு செய்த நாள்
15
பிப்
2017
01:02
ஓமலூர்: ஓமலூர், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. ஓமலூரில் பிரசித்திப்பெற்ற, கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சுற்றியுள்ள, 18 பட்டிக்கும் மூலாதாரமாக விளங்கும் இக்கோவிலில், மாசி திருவிழா நேற்று மாலை, 6:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோவில் தர்மகர்த்தா தலைமையில், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, பூச்சாட்டப்பட்டது. வரும், 16 அன்று இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 1ல், சக்தி அழைத்தல், கரகம், பொங்கல் வைத்தல், 2ல் வண்டி வேடிக்கை, 3 அன்று சத்தா பரணம் நடைபெற உள்ளது.