அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவி லில், 38 லட்சத்து 13 ஆயிரத்து 493 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் காணிக்கை உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. மொத்தம், 38 லட்சத்து 13 ஆயிரத்து 493 ரூபாய் பணமும், தங்க நகைகள் 236 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 631 கிராம் ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.