பதிவு செய்த நாள்
16
பிப்
2017
12:02
ஆர்.கே.பேட்டை: அத்திமாஞ்சேரிபேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை காலை நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார் கோவில் வளாகத்தை ஒட்டி உள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். ஓராண்டு காலமாக, கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, கணபதி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு பிரவேச பலி நடந்தது. இன்று, இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம் நடைபெறும். நாளை, காலை, 8:45 மணிக்கு, புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.மாலை 5:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடும் நடக்கிறது.