ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -5 அனைவருக்கும் ஒரு சொட்டு ஆன்மிகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2017 11:02
ஒரு காலத்தில் பெரும்பாலான கோவில்கள் ஆன்மிகப் பயிற்சிகள் மேற்கொள்வதற்கான இடங்களாகவே உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களை இதற்கு உதாரணமாய் சொல்லலாம். நீர், நிலம், நெருப்பு என ஒவ்வொரு பூதத்திற்கும் குறிப்பிட்ட விதமான சக்தி சூழ்நிலையை உருவாக்கினார்கள். யோகத்தில் மிக அடிப்படையான ஒரு சுத்திகரிப்பு முறையை பூதசுத்தி என அழைப்பார்கள். இம்முறை மூலம் நம் உடலிலுள்ள பஞ்சபூதங்களை சுத்திகரித்து அதன் மீது ஆளுமை எடுத்து வருவார்கள். ஏனெனில், உங்கள் உடல் என்பதே பஞ்சபூதங்களின் விளையாட்டுதான். ஆதியோகியின் திருவுருவம் பல அம்சங்கள் ஒன்றிணைந்து அமையவுள்ளது. இது தனித்தன்மை வாய்ந்த இந்த இடம். எந்தவொரு மதத்தினோடும் சாராமல் மனித வளத்தையே நோக்கமாய் கொண்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மிகமாவது கிடைக்கச் செய்யும்!