Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் பூச்சாட்டு ... ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -5 அனைவருக்கும் ஒரு சொட்டு ஆன்மிகம்! ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பகவுண்டம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
கருப்பகவுண்டம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
11:02

திருப்பூர் :கருப்பகவுண்டம்பாளையம் செல்வ விநாயகர்,ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.திருப்பூர், வீரபாண்டி, கருப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த காமாட்சியம்மன் கோவில் திருப்பணி முடிந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 15ம் தேதி மகா கணபதி யாகத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மாலையில், முதல்கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. 16ல், இரண்டாம் கால யாகபூஜையும், மூல மந்திர ஹோமும், கோபுர கலசம் பிரதிஷ்டை நிகழ்ச்சியும், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மாலையில், மூன்றாம் கால யாக பூஜையும், திருமுறை பாராயணம், விக்ரகங்களுக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், நாடிசந்தானம், தர்ப்பை கயிறு மற்றும் பட்டு நூல் வாயிலாக, மூல விக்ரகத்துக்கு சக்தி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை, 6:30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்கள் புறப்பட்டு சென்று, காலை, 7:35 மணிக்கு, விநாயகர், காமாட்சியம்மன், மீனாட்சி அம்மன் கோபுரம் மற்றும் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில்வழி மருதாசல குருக்கள் தலைமையிலான சிவாச்சார் யார்கள், கும்பாபிஷேகம் செய்வித்தனர். தொடர்ந்து, தசதானம், தசதரிசனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar