பதிவு செய்த நாள்
22
பிப்
2017
02:02
திருவள்ளூர்: சோமவாரத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், 1,008 திருமுறை முற்றோதல் நடந்தது. பெரியகுப்பம், அருணாசலேஸ்வரர் கோவிலில், சோம வாரத்தை முன்னிட்டு, 1,008 திருமுறை போற்றி முற்றோதல் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மணவாள நகர், சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஞான வளாகத்தில், சோமவார வழிபாடு காலை நடந்தது. மீஞ்சூர், காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர், சோமவார வழிபாட்டுக்குழு சார்பில், சிவனுக்கு பாராயணமும், மாலை அபிஷேகமும் நடந்தது.