Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பட்டியில் மகா சிவராத்திரி ... ராமேஸ்வரம் கோயிலில் பிப்.26ல் நடை அடைப்பு ராமேஸ்வரம் கோயிலில் பிப்.26ல் நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் மஹா சிவராத்திரி விழா: லட்சம் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
11:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மஹா சிவராத்திரி விழாவில், கோவில் வளாகம் முழுவதும், லட்சம் தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Default Image
Next News

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிப்24, அதிகாலை நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, மூலவர்
சன்னிதியில், பூக்களால் லட்ச்சார்ச்சனை செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், உப்புகளில் வண்ண பொடி கலந்து, சிவபெருமான், பராசக்தி அம்மன், இடைக்காட்டு சித்தர், அர்த்தநாரீஸ்வரர் உட்பட, பல்வேறு வடிவங்களில் உருவம் வரைந்து, அதை சுற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இது போன்று, கோவில் வளாகம் முழுவதும், லட்சம் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இரவு, 8:30 மணிக்கு, முதல் கால பூஜை; 11:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை; நள்ளிரவு, 12:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை; அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள, லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மஹா சிவராத்திரி உருவான கோவில் என்பதால், கோவில் கலை அரங்கத்தில், மாலை, 6:00 மணி முதல், விடிய விடிய தேவார பாடல்கள், இன்னிசை, பரதநாட்டியம் மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரில், 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar