பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
நாமக்கல்: செல்லப்பம்பட்டியில் மதுரைவீரன், கருப்பண்ண சுவாமி கோவிலில், மகாசிவராத்திரியை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்த, செல்லப்பம்பட்டி மதுரை வீரன், கருப்பண்ணசாமி கோவிலில். பிப்24, சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் தீர்த்தகுடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். காலை, 10:30 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாணம், தொடர்ந்து, கல்யாணவிருந்து வழங்கப்பட்டது, மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. இரவு வாணவேடிக்கை நடந்தது. பிப்25, காலை, 6:00 மணிக்கு பச்ச பூஜை, பிரசாதம் வழங்குதல், பகல், 1:00 மணிக்கு மதுரைவீரன், கருப்பண்ண சுவாமிகளுக்கு பொங்கல் வைக்கும் விழா நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கும் முப்பூஜை விழா நடக்கவுள்ளது. ஏற்படுகளை பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.