அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்தது தூத்துக்குடியில் பரபரப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2011 10:10
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி பீடம் உள்ளது. இதனை இந்திராணி என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று காலையில் பொன்செல்வி என்பவர் ஆதிபராசக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அம்மன் சிலைக்கு கீழே பால் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அம்மன் சிலையை உற்று நோக்கி பார்த்த போது அம்மன் சிலையின் உட்புறத்தில் இருந்து பால் சொட்டு சொட்டாக வடிவதை அவர் கண்டார். அம்மன் சிலையில் இருந்து திடீரென சொட்டு சொட்டாக பால் வடிவதை கண்ட பொன்செல்வி இது குறித்து கோவில் நிர்வாகியிடம் தகவல் தெரிவித்தார். அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் சம்பவம் அப்பகுதி மக்களிடம் வேகமாக தெரியவந்தது. தகவலை கேள்விப்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் அதிசயத்தை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாது பயபக்தியுடன் வழிபட்டும் சென்றனர். அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.