ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீராமானுஜர், 1,000வது ஆண்டு திருநட்சத்திர விழாவை ஒட்டி, சொற்பொழிவு மற்றும் பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த, 1,000வது ஆண்டு விழாவை ஒட்டி, ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் வளாகத்தில், வாராந்திர தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், ஸ்ரீராமானுஜர் காட்டிய வாழ்கை நெறி என்ற தலைப்பில் ஸ்ரீரங்கம் பட்டர் குழாம், பத்ரி நாராயணன் பட்டர் சொற்பொழிவாற்றினார். இதை தொடர்ந்து, நேற்று பஜனை பாடல்கள் பாடப்பட்டன.