பதிவு செய்த நாள்
28
அக்
2011
11:10
புதுச்சேரி : கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்று விழா நேற்று நடந்தது.புதுச்சேரி ரயில் நிலையம் எதிரிலுள்ள கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் 59ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜை நடந்தது.இதையடுத்து சிறப்பு பூஜையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. சூரசம்கார திருக்கல்யாண விழாவையொட்டி, அடுத்த மாதம் 12ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவம்பர் 1ம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், இரவு சூரசம்ஹாரமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
லாஸ்பேட்டை: லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா நேற்று மன்தினம் விநாயகர் அபிஷேகத்துடன் துவங்கியது. நேற்று மாலை 4 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றும் விழா நடந்தது. இன்று (28ம் தேதி) இரவு சூரிய பிரபை, நாளை ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா, 30ம் தேதி ஆனைமுக சூரன் சம்ஹாரம், 31ம் தேதி சிங்கமுக சூரன் சம்ஹாரம், 1ம் தேதி இரவு சூரசம்ஹாரத்திற்கு முத்து ரதத்தில் சுவாமி புறப்பாடு, 2ம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 3ம் தேதி மஞ்சள் நீர் வீதியுலா, 4ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம், 5ம் தேதி மாலை 4 மணிக்கு அபிஷேகம், இரவு உற்சவ சாந்தியுடன் பெருவிழா நிறைவடைகிறது. நேற்று இரவு நடந்த கொடியேற்றத்தில் பக்தர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.