பதிவு செய்த நாள்
03
மார்
2017
12:03
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம், வழக்கமான உற்சாகத்துடன் நேற்று நடந்தது. பவானி செல்லியாண்டியம்மன், எல்லையம்மன், மாரியம்மன் கோவில் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம், 14ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம், பொங்கல் விழா நடந்தது. நேற்று காலை, உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, 10:30 மணியளவில், செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில், பவானி நகர முக்கிய பிரமுகர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மதியம் நிலை அடைந்தது. இதனால் பவானி நகர் விழாக்கோலம் பூண்டது.