பதிவு செய்த நாள்
03
மார்
2017
01:03
கருமந்துறை: கருமந்துறையில், வரும், 7ல், காளியம்மன் கோவிலில், 29ம் ஆண்டு திருவிழா துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு, காளியம்மனுக்கு பால்குடம் எடுத்து, அபிஷேகம் நடக்கும். மாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் விளக்கு பூஜை, இரவு, 7:00 மணிக்கு, சுவாமி சக்தி அழைத்தல் நடக்கிறது. அடுத்தநாள் காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மதியம், 2:00 மணிக்கு மாவிளக்கு, அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்தல், பூ மிதித்தல் நடக்கிறது. 9 இரவு, 8:00 மணிக்கு, காளியம்மன் புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா நடக்கிறது. அப்போது, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கை நடக்கிறது. 10ல், மஞ்சள் நீராடுதலுடன், விழா நிறைவடைகிறது.