பதிவு செய்த நாள்
03
மார்
2017
01:03
திருத்தணி : திரவுபதி அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இன்று காலை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. திருத்தணி ஒன்றியம், பெரியகுடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலின் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும், 5ம் தேதி, காலை, 9:00 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள் மற்றும் 108 கலசங்கள் அமைக்கப்பட்டன. இன்று காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், கோபூஜை, தன பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை, பரிவாரதேவதை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெறும். நாளை மறுநாள் காலை, 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி தீபாராதனையும், காலை, 8:30 மணிக்கு கலச ஊர்வலம் மற்றும் காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 3:30 மணிக்கு, திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், மாலை, 6:30 மணிக்கு, உற்சர் அம்மன், வீதியுலாவும் நடைபெறுகிறது.