பதிவு செய்த நாள்
04
மார்
2017
12:03
பவானி: மழை வேண்டி, பவானியில் வருண ஜபம் நடந்தது. பவானி, சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், 1,008 முக சகஸ்ர லிங்கம் சன்னதி உள்ளது. சன்னதி முன்பு நேற்று காலை, 9:30 மணிக்கு வருண ஜபம் நடந்தது. சங்கமேஸ்வரர் கோவில் மணிகண்ட சிவாச்சாரியார் மற்றும் ஜெயப்பிரகாஷ், சுந்தர சாஸ்திரி, மாணிக்கம் குருக்கள், கண்ணன் உள்ளிட்டோர் மழை வேண்டி மந்திரங்கள் ஓதி வழிபட்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. பகல், 12:00 மணி வரை வருண ஜபம் நடந்தது.