மஞ்சூர் : மஞ்சூர் பகுதியில் வறட்சியால் தேயிலை விவசாயிகளுக்கு மகசூல் அடியோடு குறைந்தது. பசுந்தேயிலை கிலோவுக்கு அதிகபட்சம், 15 ரூபாய் கிடைத்து வருவது விவசாயிகளுக்கு ஆறுதலாக இருந்தாலும், தோட்டத்தில் பசுந்தேயிலை மகசூல் குறைந்ததால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக தேயி லை தோட்டங்களை பராமரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மழை வேண்டி, விவசாயிகள் அந்தந்த கிராமத்தில் சிறப்பு பூஜையும் செய்து வருகின்றனர்.