பழநி: பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி, நாளை (மார்ச் 7) திருக்கல்யாணம், நாளை மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. பழநி மாரியம்மன்கோயிலில் மாசித்திருவிழா பிப்.,17ல் துவங்கி 21 நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக பிப்.,21ல் திருக்கம்பம் சாட்டுதல், பிப்.,28ல் கொடியேற்றம் மற்றும் அக்னிசட்டி வைத்தல் நடந்தது. நாளை (மார்ச் 7) இரவு 8.30மணிக்கு திருக்கல்யாணம், அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் மார்ச் 8ல் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 9ல் இரவு கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்துள்ளனர்.