பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், மணவாள மாமுனிகள் கோவிலில், மகா சம்ப்ரோக் ஷணம் நேற்று நடந்தது.ஸ்ரீபெரும்பதுாரில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது, மணவாள மாமுனிகள் கோவில். இந்த கோவிலில், ராமானுஜரின் 1,000வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று மகா சம்ப்ரோக் ஷணம் நடந்தது. முன்னதாக, 3ம் தேதி மாலை நித்தியடி பூஜையுடன் சம்ப்ரோக் ஷண நிகழ்ச்சிகள் துவங்கின. அதன் பின், அங்குரார்பணம், பூர்ணாஹூதி நடந்தது. பின், நேற்று முன்தினம் காலை சிறப்பு ஹோமமும், பகல், 3:00 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனமும் நடந்தது. மகா சம்ப்ரோக் ஷணத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு விஸ்வரூபமும், காலை, 6:45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீரால் மகா சம்ப்ரோக் ஷ்ணமும் நடந்தது.