புதுச்சேரி : அரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் திரிபுர சுந்தரி முத்தீஸ்வரருக்கு ரிஷப வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியாங்குப்பம் பாரத் ஆங்கில உயர்நிலைப் பள்ளி கிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை சார்பில், அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் திரிபுர சுந்தரி முத்தீஸ்வரருக்கு ரிஷப வாகனம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயசங்கர் சிவதிருவாசக முற்றோதல் குழு, கல்யாணி திருவாசக முற்றோதல் குழு, ஏகாம்பர மணிவாசகர் மன்ற அடியார்கள் தமிழ் முறைப்படி முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில், தேவஸ்தான தலைவர் இளங்கோ, அரியாங்குப்பம் சிவனடியார்கள் திருக்கூட்டம், திருவாசக முற்றோதல் குழுவினர், கிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பார்த்தசாரதி, உமா பார்த்தசாரதி, ஆலய அர்ச்சகர் கோபு கலந்து கொண்டனர்.