கொடுமுடி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி புது பஸ் ஸ்டாண்ட், தெற்கு ரயில்வே கேட் அருகில், நவக்கிரக நாயகி ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும், 8ல் தீ மிதி விழா நடக்கிறது. இதையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. மூலவரான ஓம் காளியம்மன், நாக தேவதை அலங்காரத்தில் நேற்று அருள் பாலித்தார். இதை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு தரிசனம் செய்தனர்.