பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
குறிச்சி : சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா கல்லுாரி வளாகத்தில், கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழா கடந்த, 28ல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, கணபதி ேஹாமத்துடன் முக்கிய நிகழ்ச்சி துவங்கியது. கர்ப்பகிரக பிரவேசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து விமானம் மற்றும் கிருஷ்ணர், கணபதி, முருகன், பகவதியம்மன், நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகத்தை கேரளா, திருப்பரங்கோட்டை சேர்ந்த சங்கரன், நாராயணன் நம்பூதிரிகள் நடத்தினர்.அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, கல்லுாரி முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், முதல்வர்கள் ரமேஷ், பாபாஞானகுமார், ராதிகா, ஜேனட் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர். மாலையில், முள பூஜை, பகவதி சேவை, மகாபலி பூதம், ஆதிவாசம் ஆகியவை நடந்தன. இன்று முதல், 13ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.