சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2017 11:03
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் ஆத்மநாயகியம்மன் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட ஐந்து கோயில்களில் ஒன்றான இக்கோயில் திருவிழா மார்ச் 2 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி,அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 5ம்திருவிழாவான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. காலை 9:00 மணிக்கு விநாயகர் சன்னிதியில் இருந்து பல்லக்கில் சுவாமி அழைப்பு நடந்தது. தொடர்ந்து கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 10:20 மணிக்கு ஆத்மநாயகியம்மன் ருத்ரகோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் குங்குமம்,தாலிக்கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்தார்.